சண்முகம் தவசீலன் / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் கண்காணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட, சுயேட்சை குழுவின் வேட்பாளரை இன்று (13) கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில், கடந்த 10ஆம் திகதி மாலை, சுயேட்சைக்குழுவின் வேட்பாளர் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் வேறு கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி எறிந்து விட்டுச் சென்றுள்ளனர்.
இதன்போது, சுயேட்சைக்குழு வேட்பாளர், எதிர்வீட்டுக்காரரான, கபே அமைப்பின் கண்காணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, காயமடைந்த கண்காணிப்பாளர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இன்று (13) வேட்பாளரை கைது செய்துள்ளனர்.
16 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago