Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- மு. தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச பொறுப்பு வைத்திய அதிகாரியாக கரைச்சி பிரதேச பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தெரிவித்துள்ளது.
கண்டாவளை பிரதேசத்தின் மருத்துவ சேவைகளை இலகுப்படுத்தும் வகையிலும், நிர்வாக செயற்பாடுகள் இலகுவாக முன்னெடுக்கும் வகையிலும் இந்நியமனத்தை மேற்கொண்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கண்டாவளை பிரதேசத்தின் மேலதிக பொறுப்பு வைத்திய அதிகாரியாக வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கம் கடமையாற்றி வரும் நிலையில் இன்று
வைத்தியர் கஜேந்திரா அவர்கள் கரைச்சிக்கு மேலதிகமாக கண்டாவளைக்கும்
நியமிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அறிவித்துள்ளது.
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026