Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
கனகராயன்குளத்தில், முன்னாள் போராளி ஒருவரின் குடும்பம் மீது தாக்குதல் நடத்தியச் சம்பவம் குறித்து, விசேட விசாரணைக் குழுவொன்றை அமைத்து, தீவிர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென, நாடாளுமன்ற ஊறப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் அவைத்த தலைவருமான செல்லம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியா - கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி பொலிஸ்மா அதிபருக்கு, நேற்று (11) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“குறித்த விடையம் தொடர்பில் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட பொலிஸாரின் மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
“கடந்த 9 ஆம் திகதி இரவு கனகராயன் குளத்தில் ஒரு ஹோட்டல் உரிமையாளருக்கும் ஹோட்டல் காணி சொந்தக்காரருக்கும் இடையிலான பிணக்கு ஒன்றினை விசாரிக்க சிவில் உடையில் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மிகவும் மிலேச்சதனமாக பொலிஸ் ஒழுக்க நெறிகளை மீறி ஒரு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களையும் தாக்கிய சம்பவம் பொலிஸாரின் சட்டம் ஒழுங்கு பேணும் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் திசை மாறிச் செல்வதையே உணர்த்தி நிற்கின்றது.
“ஒட்டு மொத்த பொலிஸாருக்கும் இது களங்கத்தை ஏற்படுத்தி சென்றிருக்கின்றது. மக்கள் பொலிஸார் மீது அவ நம்பிக்கையை கொண்டிருப்பதுடன் அச்சமும், பீதியும் நிறைந்த சூழலையும் உருவாக்கியிருக்கின்றது.
“பொலிஸார் நடுநிலைமை தன்மையை மீறி,பக்கச் சார்பாக நடந்து கொள்வதாக நீதியை எதிர்பார்த்து நிற்கும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
“இதை சாதாரண ஒரு விடயமாக விட்டுச் செல்ல முடியவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி,நியாயம் பெற்றுக் கொடுக்கப்படா விட்டால் எதிர் காலத்தில் முழுமையாக பொலிஸார் மீது எமது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விடுவார்கள்.
“பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே தவறிழைத்திருப்பது அறியக் கூடியதாயிருப்பதால், மாவட்ட மட்டத்திலான விசாரணைக்கு மாவட்ட பொலிஸ் தலைமை கூட தயக்கம் காட்டுவதை அறியக் கூடியதாக இருக்கின்றது” அக்கடித்தத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
18 minute ago
22 minute ago
28 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
28 minute ago
48 minute ago