2025 ஜூலை 02, புதன்கிழமை

கனரக வாகனத்தில் மோதி விபத்து: ஒருவர் பலி (படங்கள்)

George   / 2016 மே 31 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தியில் செவ்வாய்க்கிழமை (31) காலை ஏற்பட்ட வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

மருதநகர் பகுதியை சேர்ந்த, 2 பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனம், கரடிபோக்கு பகுதியில் அமைந்துள்ள விகாரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டபோது, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள், கனரக வாகனத்தின் பின்பக்கமாக மோதியுள்ளது. 

இதில் படுகாயமடைந்த நபரை உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர், அலைபேசியில் உரையாடியவாறு பயணித்ததாகவும், கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்தில் மோதியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .