2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கப்பாச்சி குளத்தை புனரமைப்பு தருமாறு ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 மே 02 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கப்பாச்சி கிராமத்தில் புனரமைக்கப்படாத நிலையில் தூர்ந்துபோயுள்ள குளத்தை புனரமைப்பு செய்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கப்பாச்சி கிராமத்தில் 1972 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மலையகம் மற்றும் தென்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் குடியேறியிருந்தனர்.

இக்கிராமத்தில் குடிநீர் உட்பட போக்குவரத்து வசதியீனங்கள் மற்றும் அடிப்படை பிரச்சனைகள் நிறைந்து காணப்படுகின்றது.

இந்நிலையில் கப்பாச்சிக்கு மேற்புறமாக காட்டுப்பகுதியில் கவனிப்பாரற்று காணப்படும் நெல்வேலிக்குளத்தினை புனரமைப்பு செய்து மருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததுடன் அதன் கீழ் வயல் நிலங்களையும் தமக்கு வழங்கும் பட்சத்தில் தாம் கூலித்தொழிலில் இருந்து விடுபட்டு விவசாயம் செய்து வாழும் நிலை ஏற்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கிராம மக்கள் சிரமதானத்தின் மூலம் வயல்காணிகளை புனரமைத்தால் அதனை வழங்கமுடியும் என கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அரச அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மக்கள் அதனை சிரமதானம் மூலம் துப்பரவு செய்திருந்தனர்.

எனினும் அவர்களுக்கு உலர் உணவு பொதிகள் மாத்திரமே வழங்கப்பட்ட நிலையில் வயல் நிலங்கள் வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

எனவே தமக்கு வழங்குவதாக தம்மால் துப்பரவு செய்யப்பட்ட காணிகளை தமக்கு வழங்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் இன்று (02) தமது கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X