2021 மே 08, சனிக்கிழமை

கரைச்சியில் 150 பேர் மீள்குடியேற்றம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 04 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த  மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 150 பேர் மீள்குடியேறி உள்ளனரென்று தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த அதிகமான குடும்பங்கள், இந்தியாவின் தமிழகத்தில் தங்கி இருந்து, தற்போது தாயகம் திரும்பிவருகின்றனர். 

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில் இருந்து திரும்பிய 150 பேர், கரைச்சி பிரதேச செயலாளர்  பிரிவில் குடியேறியுள்ளனர். 

அதாவது, 2018ஆம் ஆண்டில், 114 பேரும் 2019 ஆம் ஆண்டில், 26 பேரும் 2020ஆம் ஆண்டில், 10 பேரும் என மொத்தமாக 150 பேர் தாயகம் திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, 2018ஆம் ஆண்டில் திரும்பிய 85 பேருக்கும் 2019ஆம் ஆண்டில்  திரும்பிய 30 பேருக்கும் 2020ஆம் ஆண்டில் திரும்பிய 06 பேருக்கும் தற்காலிக கொட்டகையமைத்தல், உபகரணங்கள் வழங்குதல், காணிகளை துப்புரவு செய்தல் என்பவற்றுக்கான கொடுப்பனவுகள்  வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X