Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரைச்சி பிரதேச கலாச்சார விழா இன்று (04) கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
வடமாகாண கலாச்சார திணைக்களம் மற்றும் கரைச்சி பிரதேச கலாச்சார பேரவை ஆகியன இணைந்து கரைச்சி பிரதேச கலாச்சார நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த விழா கரைச்சி பிரதேச கலாச்சார பேரவை தலைவரும், கரைச்சி பிரதேச செயலாளருமான ரி.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டதுடன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்ட செயலர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கரைச்சி பிரதேசத்தில் நீண்டகாலம் கலைத்துறையில் சேவையாற்றிய திருமதி பார்வதி சிவபாதம் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
நிகழ்வில் தமிழ் கலை கலாச்சார மற்றும் கிராமிய நிகழ்வுகள் இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .