2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கருங்கல், மணல் அகழ்வுக்கு தடை

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் கருங்கல் மற்றும் மணல் அகழ்வுக்கு தடை விதிப்பதாக ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், திங்கட்கிழமை (19) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தட்டார்மலை உட்பட சிலவிடங்களில் கருங்கல் அகழ்வும் பல பகுதிகளில் மணல் அகழ்வும் நடைபெறுவதாகவும் அவை பிரதேச மக்களின் பயன்பாட்டுக்கு அப்பால் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .