Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
George / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கரைச்சி பிரதேச சபை செயலாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச சபையின் சிற்றூழியர்கள், பணி பகிஸ்கரிப்பில் இன்று ஈடுப்பட்டனர்.
பிரதேச செயலாளர் தகாத வார்தைகளை பிரயோகித்து அவமானப்படுத்தி வருவதுடன், பழிவாங்கும் நோக்கத்தில் செயற்பட்டு வருவதாகவும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள சிற்றூழியர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், இடைநிறுத்தப்பட்ட பணியாளர்களை உடன் வேலைக்குச் சேர்த்துக்கொள்ள வேண்டும். தம்மை தரக்குறைவாக பேசிய பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதனிடம் கேட்டபோது, “இரண்டு வெளிக்கள தொழிலாளர்கள் தங்களின் கடமைப் பட்டியலுக்கு அமைவாக பணிகளை மேற்கொள்ளாது, அலுவலகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி வந்ததன் காரணமாக, அவர்கள் இருவரும் விசாரணையின் பொருட்டு தற்காலிகமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும்தான் ஏனையவர்களையும் தூண்டிவிட்டு இவ்வாறான ஒரு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் தங்களது கடமைப்பட்டியலுக்கு அமைவாக பணிகளை செய்ய முன்வந்தால் உடனடியாக பணிக்கு மீண்டும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்” என்றார்.
மேலும், தகாத வார்த்தைகளை தான் பயன்படுத்தவில்லை என்றும், பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக இவ்வாறு கூறுகின்றனர் எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago