2021 மே 08, சனிக்கிழமை

கள்ளு தவறணையில் காவலாளியின் சடலம் மீட்பு

Niroshini   / 2021 ஜனவரி 31 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் கீழுள்ள கள்ளு தவறணையில் இருந்து, இன்று (31) குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரியை சேர்ந்த சின்னராசா ஜெகன் (வயது - 39) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர், கள்ளு தவறணையில் காவலாளியாக கடமையாற்றி வருபவரென, சாவகச்சேரி பொலிஸார் கூறினர்.

குறித்த நபர், வழமை போன்று, (30) இரவு, காவல் கடமைக்காக சென்ற நிலையிலேயே, சடலமாக மீடகப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X