Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூலை 04 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
'கிளிநொச்சி நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சேரும் கழிவுகள் உரிய முறைகளில் அகற்;றப்படாமல் காணப்படுவதுடன், கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பில் கரைச்சிப் பிரதேச சபையினர் அக்கறை செலுத்துவதில்லை' என்றும் பல்வேறு தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கரைச்சிப் பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள கிளிநொச்சி பொதுச்சந்தை, பஸ் தரிப்பிடம், இரணைமடு பொதுச்சந்தை, இரணைமடுச்சந்தி மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் தினமும் சேர்கின்ற கழிவுகளை அகற்றுவதற்கான முகாமைத்துவம் பின்தங்கிக் காணப்படுவதாக, வர்த்தகர்கள், பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் ஈக்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
'வாரத்தில் மூன்று அல்லது இரண்டு நாட்கள் மாத்திரம் குறிப்பிட்ட சில இடங்களில் உள்ள குப்பைகள் மாத்திரம் அகற்றப்படுவதனால், மற்றைய இடங்களில் காணப்படும் சில கழிவுகள் அகற்றப்படுவதில்லை. நகரில் இருந்து கொண்டு செல்லப்;படும் கழிவுகள், பரந்தன் உமையாள்புரம் பகுதியிலுள்ள தனியார் காணிகளிலும், ஏ-9 வீதி புகையிரத வீதி ஆகியவற்றுக்கு அருகிலுள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மத்தியிலும் கொட்டப்படுகின்றன' என்று வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கரைச்சிப் பிரதேச சபையினால் கழிவகற்;றப்பட வேண்டிய இடங்களிலும் பிரதேச சபையினால்; பராமரிக்கப்பட வேண்டிய இடங்களையும், இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் 200க்கும் மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படையாளிகளைக் கொண்டு பிரதேச சபை நிர்வாகம் துப்பரவு செய்தமை இங்;கு குறிப்பிடத்தக்கது.
27 minute ago
40 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
40 minute ago
41 minute ago
46 minute ago