2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

கவனயீர்ப்புப் பேரணி

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களால், புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (15) கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்புப் பேரணியில், ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை மாணவர்களும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர்.

ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான இந்தக் இந்தக் கவனயீர்ப்புப் பேரணி, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தைச் சென்றடைந்தது.

இதன் பின்னர், அங்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் பிரகலாதன் தலைமையில், விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .