2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் இன்று காலை முதல் பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள கையளிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதற்கு தீர்வாக பிரதேசத்தின் ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கடந்த மாதம் உறுதியளித்திருந்தார்.

மிகுதிக் காணியை விடுவிக்கக்கோரி  காணி உரிமையாளர்கள் மீண்டும் கடந்த புதன்கிழமை ஒன்றுகூடி இன்று சனிக்கிழமைக்கு முன்னர் காணிகளை விடுவிக்குமாறும் இல்லாவிட்டால் தொடர் போராட்டங்களை மேற்கொள்வதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையிலேயே இன்று சனிக்கிழமை காலை பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்கு முன்னால் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .