Editorial / 2023 செப்டெம்பர் 15 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சியில் வியாழக்கிழமை (14) காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை (15) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாலையாளபுரம் புதுஜயன்கன்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வரும் நபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸார் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் சென்றுள்ளனர்.
இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர்கள் பொலிஸாரை கண்டு
குளத்திற்குள்ளாக தப்பியோடிய போது அவர்களை பொலிஸார் தனித்தனியாக ஒவ்வொரு வழியாக துரத்திச் சென்றுள்ளனர்.
இறுதியில் இரு பொலிஸார் திரும்பிய நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்தார்.
அவரை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தேடிய போதும்
கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் குளத்திற்குள் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில்
தேடுதலை மேற்கொண்டதில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் பன்சலகொட வலஸ்முல்ல பகுதியைச்
சேர்ந்த லியனகே சத்துரங்க என்பவரே இறந்துள்ளார். மேலதிக விசாரணைகளை
கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
31 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
31 minute ago
52 minute ago