Niroshini / 2021 டிசெம்பர் 13 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
நீதியான முறையிலே விசாரணை நடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கிடைக்கப்பட வேண்டும் என்பதுதான் தங்களுடைய நிலைப்பாடெனத் தெரிவித்த டெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், அதில் தாங்கள் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது தொடர்பில் தன்னுடைய நிலைப்பாடு குறித்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள் தொடர்ச்சியாகப் பல வருடங்கள் தம் உறவுகளைத் தேடிப் போராடி வருகிறார்கள் எனவும் தாங்கள் இதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளதோடு, அந்த உறவுகளுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் எனவும் கூறினார்
இதில், அரசாங்கம் மேம்போக்காக மரணச் சான்றிதழ் வழங்குகிறோம், இறந்தவர்களுக்கான, நிவாரணம் வழங்குகிறோம், நிதி உதவி வழங்குகிறோம் என்பதன் மூலம் இதற்கான தீர்வினை அடைந்து விட முடியாது எனவும், அவர் தெரிவித்தார்.
அவற்றுக்கும் அப்பால், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே தங்களுடைய நிலைப்பாடு எனவும், அவர் கூறினார்.
"தங்கள் கண்களின் முன்னால் பாதுகாப்புப் படையிடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றவர்களுக்கு, அவர்களுக்கு நடந்தவை குறித்து தெரியப்படுத்தப்படுவதோடு, அதற்கான நீதியான முறையிலே ஒரு விசாரணை நடத்தப்பட்டு உரியவர்களுக்கு, தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்” என்றார்.
27 minute ago
31 minute ago
44 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago
44 minute ago
10 Nov 2025