2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘காணிகளைத் துப்புரவு செய்யவும்’

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகர அபிவிருத்தி சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய வகையில், பராமரிப்பின்றி பற்றைக்காடுகளாகக் காணப்படுகின்ற காணிகளை, உடனடியாக துப்புரவு செய்யுமாறு, கரைச்சிப்பிரதேச சபைத் தலைவர் அ.வேழமாலிகிதன், அதன் உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தக் காணிகளுக்குள் காணப்படுகின்ற வெற்றுப் போத்தல்கள், ரின்கள், கோப்பைகள், நீர்த் தேங்கக்கூடிய சேதமடைந்த பாத்திரங்கள் என்பன காணப்படுகின்றன. இதேவேளை, இந்தக் காணிகளில் சமுக விரோதச்செயல்களும் இடம்பெற்று வருகின்றன.

எனவே, இக்காணிகளை உடனடியாக துப்புரவு செயவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு துப்புரவுச் செய்யத்தவறின், காணியின் பெறுமதியில் இரண்டு வீதம் அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு, காணிகளைத் துப்புரவுச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X