Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 21 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில், வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில், இன்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சின் செயலாளர், இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, பொலிஸ் அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், வவுனியா மாவட்டச் செயலாளர், வவுனியாவின் நான்கு பிரதேச செயலாளர்கள், வன வளத்திணைக்கள அதிகாரிகள், வட மாகாண காணி ஆணையாளர் உட்பட நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், வவுனியாவில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட நிலையில், செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் அருவித்தோட்டத்தில் இராணுவம் கையப்படுத்தியுள்ள 123 ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பில் கரிசனை எடுக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது வனவளத்திணைக்களத்திடம் இராணுவத்தினரின் பாவனைக்காக மாற்றுக்காணிகளை கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சரோ ஏனைய அதிகாரிகளோ கருத்துக்கூற மறுத்துவிட்டனர்.
18 minute ago
27 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
45 minute ago