Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்டத்தில், ஒரு வருட காலத்தில், காணிப் பிணக்குகள் தொடர்பில், விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் 833 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவென, மாவட்டச் செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.
வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு, குடியிருப்பு கலாசார மண்டபத்தில், சபை தவிசாளர் இ.நவரட்ணம் தலைமையில், இன்று (22) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த 833 காணிப் பிணக்குகளில் 132 பிணக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளனவெனவும் வவுனியா பிரேதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 333 பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரச உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லையெனவும் கூறினார்.
ஆனால், 2020ஆம் ஆண்டில், இவ்வாறான நிலைமைகள் இருக்காதெனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .