2025 ஜூலை 30, புதன்கிழமை

’காணியை அபகரிக்கும் நோக்கில் செயற்பாடு’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 19 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி அக்கராயன் கரும்பத் தோட்டக் காணிகளை, அரச அதிகாரிகள் பலர், மறைமுகமாக கூறுபோட்டு அபகரிக்கும் நோக்கில் செயற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இராணுவத்தினரின் பயன்பாடடில் இருந்து, அக்கராயன் கரும்பத் தோட்டப் பகுதியில் உள்ள 200 ஏக்கர் வயல் காணி விடுவிக்கப்பட்டதன் பின்னர், குறித்த காணியில், அக்கராயன், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில், காணிகளின்றி வாழ்கின்ற குடும்பங்களுக்கு, பயிர் செய்கைகளுக்காக பகிர்ந்தளிக்குமாறு பல்வேறு தரப்புக்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கரைச்சிப் பிரதேச செயலகத்தில், நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணி தொடர்பாக கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இம்பெற்றன.

குறித்த காணி, பிரதேச செயலக உயர் மட்டக் குழுவொன்றின் பயன்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்த கரைச்சிப் பிரதேச செயலர் கோ. நாகேஸ்வரன், இந்தக் காணி தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திண்டாடினர்.

இந்நதக் காணி தொடர்பில், சில முக்கிய பொறுப்பிலுள்ள அதிகாரிகள் அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதை உடனடியாக நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .