2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

காற்றாடிக்குள் சிக்குண்ட பெண் உயிரிழப்பு

Editorial   / 2017 நவம்பர் 06 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வெங்காயம் உலர்த்தும் போது, உழவு இயந்திரத்தில் பொருத்திய காற்றாடியில் சிக்குண்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று, புத்தூர் பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

அறிவொறி வீதி, புத்தூர் பகுதியைச் சேர்ந்த இரத்தினம் தவமலர் (வயது 58) என்ற பெண்ணே, இவ்வாறு உயிரிழந்துள்ளாரென, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக விடாது பெய்த மழையால், வீட்டில் கட்டியிருந்த வெங்காயப் பிடிகள் மழையில் நனைந்திருந்தன. அவற்றை உலர்த்துவதற்காக வீட்டில் நின்றவர்கள் உழவு இயந்திரத்தை இயக்கி, அதனூடாக காற்றாடியை இணைத்து, வெங்காயத்தை உலர வைத்துள்ளனர்.

இதன்போது குறித்த பெண், ஆடைகளை உலர்த்துவதற்காக காற்றாடிக்கு அருகில், ஈரமான ஆடைகளை எடுத்து சென்றுள்ளார். காற்றாடியில் இருந்த வந்த காற்று, அவரை உள் இழுத்துள்ளதுடன், அணிந்திருந்த சேலையும் சக்கரத்தில் சிக்குண்டுள்ளது.

இதனால், காற்றாடியின் பிளேட்டுக்குள் சிக்குண்டதில் பாரிய வெட்டுக்காயங்களுக்கும் உள்ளாகியுள்ளான குறித்த பெண், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது, இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .