2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘கால அவகாசத்தை வழங்குவதால் எவ்வித பயனும் ஏற்படாது’

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

மனிதாபிமானமே இல்லாத இலங்கை   அரசாங்கத்திடம் மனித உரிமைகளை உறுதிப்படுத்துமாறு கோரி கால அவகாசத்தை வழங்குவதால், எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லையென, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கலாதேவி தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தங்களின் போராட்டத்தைக் கவனத்தில் எடுக்காத அரசாங்கத்துக்கு, கால அவகாசத்தை வழங்குவதன் ஊடாக, இலங்கை  அரசாங்கத்திடம் சர்வதேசம் எவ்விதமான முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறதெனக் கேள்வியெழுப்பினார்.

இவ்வாறு, இலங்கை  அரசாங்கத்துக்கு, தொடர்ந்தும் கால அவகாசத்தை வழங்கினால், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்கள், தங்களது எதிர்பார்ப்பு நிறைவேறாது ஒன்றன் பின் ஒன்றாக உயிர்களை மாய்ப்பதற்கு வழிவகுக்குமென, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X