Niroshini / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
அருவியாற்றின் சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போயிருந்த கிராம அலுவலகர், இன்று (31) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்றுக் காலை, அரிப்பு - பழைய தோனித்துறை பகுதியில், இவரது சடலமாக கரை ஒதுங்கிய நிலையில், மீட்கப்பட்டுள்ளது.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோமஸ்புரி கிராம அலுவலகர் பிரிவில் கிராம அலுவலகராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
உயிரிழந்த கிராம அலுவலகர் உள்ளிட்ட 6 பேர், கடந்த செவ்வாய்க்கிழமை (29), அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து, வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இவர்கள் ஆற்றில் குறித்துக்கொண்டிருந்த நிலையில், சுழிக்குள் அகப்பட்டுள்ளனர். அதையடுத்து, அங்கிருந்தவர்களால், 5 பெர் காப்பாற்றப்பட்ட நிலையில், குறித்த கிராம அலுவலகர் மாத்திரம் காணாமல் போயிருந்தார்.
இதையடுத்து, தொடர்ந்து, 3 நாள்கள் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,இன்றுக் காலை அரிப்பு - பழைய தோனித்துறை பகுதியில், இவரது சடலமாக கரை ஒதுங்கியிருந்தது.
சம்பவத்தினத்தன்று, இவர்களை அனைவரும் போதையில் இருந்ததாகவும் குளித்த இடத்தில் இருந்து மதுப் போதத்தல்களும் சமைத்த உணவுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
19 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
14 Nov 2025