2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கிராம அலுவலருக்கு அச்சுறுத்தல்

Freelancer   / 2022 ஜூலை 13 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கர்

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியொன்றில் புதையல் தோண்டப்படுகின்றது என்ற கிராம மக்களின் முறைப்பாட்டிற்கு அமைய குறித்த பகுதிக்கு களப்பரிசோதனை மேற்கொள்ள சென்ற கிராம அலுவலர் அச்சுறுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பாண்டியன்குளம் பிரதேசத்தில் புதையல் தோண்டப்படுகின்றதாக கிராம மக்களின் முறைப்பாட்டிற்கு அமைய, குறித்த பகுதிக்கு சென்ற பெண் கிராம அலுவலர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் முன்னால், புதையல் தோண்ட முற்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதேவேளை மாந்தை கிழக்கு பகுதிக்கு வருகைதந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விநோதரலிங்கம் புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் இடத்தினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .