Niroshini / 2021 டிசெம்பர் 13 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கிளிநொச்சிக்கு இன்று (13) விஜயம் மேற்கொண்டது.
இதன்போது, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒன்று, கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புகளின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளுவதற்காக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தனர்.

27 minute ago
31 minute ago
44 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago
44 minute ago
10 Nov 2025