2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிளிநொச்சியில்டெங்கு பரவும் அபாயம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 31 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன் 

எதிர்வரும் மழைக் காலத்தில் பாரிய டெங்கு அனர்த்தத்தை, கிளிநொச்சி மாவட்டம் எதிர்நோக்கலாம் என அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

கிளிநொச்சி மாவட்டத்தில், டெங்கு நோய் பரவும் அபாயநிலை காரணமாக, சுகாதாரத் துறையினர் ,இன்று (31) பல்வேறு பகுதிகளில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இவர்களுக்கு உதவியாக மன்னார் பிராந்திய தொற்றுநோய் விஞ்ஞான மருத்துவ அதிகாரி சுதாகர் தலைமையிலான டெங்கு விசேட நடவடிக்கைப் பிரிவினரும், இதில் கலந்துகொண்டனர். 

இக்குழுவினரது ஆய்வுகளின் அடிப்படையில் வீடுகளில் காணப்படும் நீர்தேங்கக்கூடிய பாத்திரங்கள், பழைய போத்தல்கள், மற்றும் வீசியெறியப்படும் பாவனைப் பொருட்கள் ஆகியவற்றில், டெங்கு நுளம்புகள் அதிகம் பெருகுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே, கிளிநொச்சி மாவட்ட மக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் காணப்படும் நீர் தேங்கக்கூடிய பொருட்களை உடனடியாக சேமித்து அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

அவ்வாறு அகற்றுவதற்குத் தேவையான உதவிகளை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வழங்குவார். இதனை செய்யத்தவறும் பட்சத்தில், எதிர்வரும் மழைக் காலத்தில் பாரிய டெங்கு அனர்த்தத்தை, கிளிநொச்சி மாவட்டம் எதிர்நோக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X