2025 மே 01, வியாழக்கிழமை

’கிளிநொச்சியில் உபஉணவுச் செய்கைகள் முன்னெடுப்பு’

Niroshini   / 2021 ஜனவரி 07 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், காலநிலைக்கு சீரமைவான விவசாய செயற்றிட்டங்களினூடாக ஸ்கந்தபுரம், வன்னேரிக்குளம், ஜெயபுரம் ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளில் உபஉணவுச்செய்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ,மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உபஉணவுச் செய்கைகளை ஊக்குவிப்பதற்கான பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், காலநிலைக்கு சீரமைவாக நீர்ப்பாசன விவசாய செயற்றிட்டத்தின் மூலம் ஸ்கந்தரபுரம் விவசாய போதனாசிரியர் பிரிவு, வன்னேரிக்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவு, ஜெயபுரம் விவசாய போதனாசிரியர் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 400 கிலோகிராம் உழுந்து, 505 கிலோகிராம் பயறு, 500 கிலோகிராம் கௌபி, 4740 நிலக்கடலை, 65 கிலோகிராம் சோளம் என்பன வழங்கப்பட்டு, பயிர் செய்கைகள் முன்னெடுக்கப்பட்;டுள்ளதாக தெரிவிக்;;கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .