2025 மே 07, புதன்கிழமை

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி

Editorial   / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி, உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் குண்டொன்று வெடித்ததில் ஒருவர் மரணமடைந்தார். சம்பவத்தில் காயமடைந்த 13 வயதான சிறுவன் , கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிடைத்த மர்மப் பொருளொன்றை கிரைண்டர் ஒன்றினால், வெட்டிக்கொண்டிருத போதே, இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 இச்சம்பவத்தில்,சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) உயிரிழந்துள்ளார்.  சிவலிங்கம்  நிலக்சன் என்ற சிறுவன் படுகாயமடைந்துள்ளார் எனத் தெரிவித்த கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

வெடிப்பு சம்பவம்  இடம்பெற்ற  வீட்டை சூழவுள்ள சில பகுதிகளிலும் ஆபத்தான வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X