2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை

Freelancer   / 2022 பெப்ரவரி 05 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாஸ்கரன்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்து சேகரிக்கும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தனராஜ் தலைமையில் கிளிநொச்சி சேவைச் சந்தை வளாகத்தில் ஆரம்பமானது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான டிவனியாவின் மகளும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு ஒப்பமிட்டிருந்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் தாக்கம் தொடர்பில் உரையாற்றியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .