2025 மே 07, புதன்கிழமை

கிளிநொச்சியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு

Niroshini   / 2021 நவம்பர் 14 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சியில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, மீண்டும் அதிகரித்துள்ளதாக, கிளிநொச்சி  மாவட்ட தொற்றுநோயியல் பிரிவினர் தெரிவித்தனர்.

 நேற்று முன்தினம் (12),  52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினர்

தற்போது நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ்  இல்லை என்ற மன நிலையில் பொது மக்களின்  செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதாக சாடிய பிரிவினர், பஸ்களில் பயணம் செய்வோர், சந்தைகள், பொது இடங்களில் என மக்கள் முககவசம் இல்லாமலும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதும் செயற்பட்டு வருகின்றனர் எனவும் சுட்டுக்காட்டினர்.

 இதன் விளைவாகவே, குறைந்திருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது மீண்ம் அதிகரிக்க தொடங்கியிருக்கது. எனவே, பொதுமக்கள் பொது இடங்களுக்கு பயணிக்கின்றது போது, கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும்  கிளிநொச்சி  மாவட்ட தொற்றுநோயியல் பிரிவினர் கேட்டுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X