2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் கோர விபத்து; ஒருவர் மரணம் - பலர் ஆபத்தான நிலையில்...

Freelancer   / 2024 ஜனவரி 24 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி  பயணித்த வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து, விதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின் வேனுடன் மோதியுள்ளது.

விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில்  சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X