Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.என். நிபோஜன் / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு முறுகண்டியைச் சேர்ந்த 32 வயதான, ஒரு பிள்ளையின் தாயான கறுப்பையா நித்தியகலா என்பவரே இன்று கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் என அடையாளங் காணப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகதரின் இடுப்புப் பட்டி, இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனா இருந்ததால் இவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்ட எமது பிராந்திய செய்தியாளரும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினரொருவரும் சேர்ந்து கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் நிறுவனங்களுக்கு சென்று பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் யார் இன்று வருகை தரவில்லை என வினவியபோது அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஓர் உத்தியோகத்தர் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்கு சென்று அவர்களிடம் விசாரித்ததன் பின்னர் அவர்களை வைத்திய சாலைக்கு அழைத்து சென்று சடலம் அவர்தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் குறித்து ஊடகவியலாளரால் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago