Editorial / 2024 பெப்ரவரி 04 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்
76 வது சுதந்திர தினமான ஞாயிற்றுக்கிழமை (04)  கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள போராட்டத்தை   தடுக்க பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால், கிளிநொச்சியில் ஒருவகையான பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது,
இலங்கையின் 76 வது சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் இன்று (04) மேற்கொள்ளப்படவிருக்கும் போராட்டத்தை தடுக்கும் வகையில்  பொலிஸார் தயார்ப்படுத்தப்பட்டிருந்தனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “சுதந்திர நாள் கரிநாள்” என்றுகூறி  கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போராட்டத்தை செயற்படுத்தும் ஐந்து நபர்களுக்கு தடை உத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டிருந்தன.  அத்தோடு அதிகளவான பொலிஸார் மற்றும் நீர்த்தாரை  பிரயோக வாகனம் உள்ளிட்டவற்றுடன் பொலிஸார் தயார்ப்படுத்தப்பட்டிருந்தனர்.

30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025