2025 மே 05, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

Editorial   / 2021 மே 22 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன், எஸ். பாஸ்கரன்

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபபெண் உயிரிழந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஊடாக பி.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தன.

குறித்த மாதிரிகள் கடந்த இரவு (21) யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

77 வயதுடைய குறித்த பெண் திருவையாறு பகுதியில் வசித்துவந்தவர் என்றும் அவருடைய மகன், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பணியாற்றுவதாகவும் அவருடைய குடும்பத்தை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன.

பெண்ணின் சடலம், உறவினர் ஒருவர் முன்னிலையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வவுனியாவில் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X