2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் விபத்து: இரு பிள்ளைகளின் தாய் பலி

Nirshan Ramanujam   / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரொமேஷ் மதுஷங்க)
கிளிநொச்சியில் இன்று (11) காலை இடம்பெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தாயொருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, பரந்தன் வீதியில் பயணம் செய்தி சொகுசு வான் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்த பெண்ணொருவர் மீது வான் மோதியுள்ளது.

இச்சம்பவத்தில் வாகனத்தின் சாரதியும், பெண்ணும் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் பலியானதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் சிவக்குமார் ஜெகதம்பாள் (47) என்ற இரு பிள்ளைகளின் தாய் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .