2025 மே 01, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் 13 குடும்பங்கள் பாதிப்பு

Niroshini   / 2021 ஜனவரி 11 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 13 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இன்று மாலை 4 மணிவரை சேகரிக்கப்பட்ட தகவலுக்கமைய, கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுகளில் சீரற்ற வானிலையால் 13 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அதற்கமைவாக, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 7 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான வெள்ள அபாயம் காணப்படும் நிலையில், மக்கள் அவதானமாக செயற்படுமாறும், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் கிராம சேவையாளர், படையினர் மற்றும் பொலிசாரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு, மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இடர் ஏற்படுமிடத்து 021-4927544 எனும் அவசர அழைப்புக்கு தொடர்பு கொண்டு, உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறும், மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .