2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் 38 ஏக்கர் காணி விடுவிப்பு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி மாவட்டத்தில், இராணுவத்தினர் வசமிருந்த 38 ஏக்கர் காணி இன்று (15) விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 38 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்களை இராணுவத்தினர, கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்தனர்.

கரைச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை இனங்காணப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக மாவட்ட செயலர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர்களும் உடனிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .