2025 மே 09, வெள்ளிக்கிழமை

’கிளிநொச்சி ஆசிரியர்களுக்கு நாளை தடுப்பூசி’

Niroshini   / 2021 ஜூலை 07 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் கீழ் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும், நாளை (08) கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக, கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியல் வைத்தியஅதிகாரி வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.

இதற்கமைய, நாளை காலை எட்டு மணி முதல் பிற்பகல் நான்கு மணிவரை, கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்திலும், கிளிநொச்சி சாந்தபுரம் இராணுவ வைத்தியசாலையிலும், பூநகரி மத்திய கல்லூரியிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் கீழ் ஆசிரியர்கள், பணியாளர்கள் என 3328 பேர் கடமையாற்றுகின்றனர். எனவே,  இவர்கள் மேற்படி நிலையங்களில் ஏதாவது ஒன்றுக்குச் சென்று, தங்களுக்குரிய தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X