2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி சிறுமி கண்டுபிடிப்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி நகர் பகுதியில் கடந்த 17ஆம் திகதி முதல்  காணாமல் போன 15 வயதுடைய சிறுமி மாத்தளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் பெற்றோருடன் வசித்து வந்த 15 வயதுடைய  சிறுமி கடந்த 17ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்ததாக  அவரது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

எனினும், இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் முன்னெடுப்பதில் அசமந்த போக்கு காட்டி வருவதாக குறித்த சிறுமியின் பெற்றோரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த சிறுமி நேற்றைய தினம் அவரது பெற்றோர்களால் மாத்தளை - செலகம என்ற இடத்திலிருந்து  கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை நபர் ஒருவர் இரு பெண் பிள்ளைகளின் உதவியுடன் மாத்தளைக்கு கடத்திச் சென்றதாகவும், அங்கிருந்து சிறுமி தப்பியோடி அவர்களது பெற்றோரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு பெற்றோரால் கிளிநொச்சிக்கு அழைத்து வரபபட்டுள்ளார்.

 நடந்தவை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X