Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு பாடசாலைகளுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இன்று (27) காலை திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
கடந்த வருட இறுதியில், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 11 பாடசாலைகளைப் புனரமைப்பதற்காக, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய, ஜனாதிபதியால் கடந்த மாதம், 31.5 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 8 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 3 பாடசாலைகளும் புனரமைக்கப்படவுள்ளன.
இந்நிலையில், குறித்த புனரமைப்புப் பணிகளின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகவே, ஆளுநர் சுரேன் ராகவன், கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகானந்தா ஆரம்பப் பாடசாலை, புனித அந்தோனியார் ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு, இன்று திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது, பாடசாலை மாணவர்களுடனும் அதிபருடனும், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடிய ஆளுநர், மாணவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026