2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிளியில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மு. தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது 800 அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கே அன்டிஜன் பரிசோதனைக் கருவிகள் இருப்பதாகவும் இதனால் கடுமையான நோய் அறிகுறிகளுடன் வருகின்றவர்களை தவிர சாதாரண நோய் அறிகுறிகளுடன் வருகின்றவர்களை பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,   இதனால் பரிசோதனை
எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மாவட்ட சுகாதார தரப்பினர், மேற்படி 800 பிரசோதனை கருவிகள்ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என்றும் அதற்கு பின்னர் கொழும்பிலிருந்து பரிசோதனைக் கருவிகள் கிடைக்கப்பெறுகின்ற போதே  தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X