2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘குடிநீரை வழங்க வளங்கள் இல்லை’

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பூநகரிப் பிரதேசத்தில், மக்களுக்கான குடிநீரை வழங்குவதற்கு, போதிய வளங்கள் இல்லாதிருப்பதுடன், குடிநீரைப் பெறுகின்ற இடங்களில் நீர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் பூநகரிப் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

பிரதேச சபையால், ஏற்கெனவே குடிநீர் விநியோகிக்கின்ற பகுதிகளுக்குத் தொடர்ச்சியாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், மக்கள் கோரிக்கை விடுகின்ற பகுதிகளுக்கு மேலதிக சேவைகளை வழங்குவதற்கு, பிரதேச சபையிடம் போதிய வளங்கள் இல்லை.

இவ்வாறு வளங்கள் இன்மை மற்றும் நீர் பெறும் இடங்களில் போதிய நீரைப் பெற்றுக்கொள்ள முடியாமை போன்ற காரணங்களால், குடிநீர் விநியோகம் மேற்கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதாக, பிரதேச சபை மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X