Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 மே 23 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள் முடக்கப்படுகின்ற போது அல்லது அப்பகுதியில் உள்ள குடும்பங்கள் தனிமைப்படுத்தப்படுகின்ற போதோ குடிநீர் பிரச்சினை ஏற்படுமாயின், அதனை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், நாட்டில் தற்போது பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதாக இருந்தால், வட்டார உறுப்பினர்கள் அல்லது உப பிரதேச சபை பொறுப்பதிகாரிகளுடன் தொடர்புகொள்ளுமாறும், அவ்வாறு தொடர்புகொள்ளும் போது குடிநீரை, இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் கரைதுறைப்பற்று பிரதேசம் காணப்படுகிறது. இந்தப் பிரதேசத்தில் 13 ஆயிரத்து 280 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
அத்துடன், ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள் என (21.05.21 வரை) 88 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago