Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சியில், மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புகளுக்கு அருகில், இராணுவத்தினர், குண்டுகளைச் செயலிழக்க வைப்பதாக, பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி, உமையாள்புரம், தட்டுவன்கொட்டி, ஆணையிறவு ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே, குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2 மாதங்களாக, குறித்த பகுதியில் இவ்வாறு குண்டுகள் செயலிழக்க பண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனால் தாம் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் குடியிருப்புக்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 250 மீற்றர் தொலைவில் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வெடிபொருட்களின் சிதைவுகள் குடியிருப்புகளை அண்மித்த பகுதிகளில் வந்து வீழ்வதாகவும், அதனால், தமக்கு ஆபத்துக்கள் ஏற்படலாம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இவ்வாறான செயற்பாடுகளை மக்கள் செறிந்து வாழும்பகுதியில் முன்னெடுப்பதை இராணுவத்தினர் தவிர்க்க வேண்டுமெனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .