2025 மே 01, வியாழக்கிழமை

குடும்பஸ்தரின் உயிரை பறித்த “யாழ்ராணி”

Freelancer   / 2024 ஜனவரி 18 , பி.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - அறிவியல்நகர் பகுதியில் இன்று மாலை 4.30 புகையிரதத்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். 

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த (043 வயது)2 பிள்ளைகளின் தந்தையான டிப்பர் சாரதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் புகையிரத அதிகாரிகளால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

பின்னர் குறித்த சடலம் புகையிரத நிலைய அதிகாரிகளால் கிளிநொச்சி வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .