2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குடும்பஸ்தர் உயிரிழப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 08 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி, இன்று உயிரிழந்துள்ளார்.

புளியடி பகுதியை சேர்ந்த சிவபாலன் (வயது 49) என்ற குடும்பஸ்தரே, இவ்வாறு உயிரிழந்தவார் ஆவார்.

அவருக்கு தவறுதலான தடுப்பூசியை ஏற்றியமையாலேயே, அவர் உயிரிழந்துள்ளதாக, அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வவுனியா – மகாறம்பைக்குளம், புளியடிபகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக நாய்கடிக்கு இலக்காகினார்.

இந்நிலையில் அதற்கான தடுப்பூசியை போடுவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு இன்றையதினம் அவர் சென்றுள்ளார். அவருக்கு நாய்கடித்ததற்கான தடுப்பூசி இன்று காலை போடப்பட்டது. அதன்பின்னர் அவர் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் அவருக்கு திடீர் என்று சுகவீனம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  எனினும் அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .