Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மார்ச் 17 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் அதற்கு நீதி கோரியும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது தரும்புரம் போலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும், வட்டக்கச்சி பிரதேசத்தில், இன்று (17) முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு, மேற்படி சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், இச்சம்பவத்தைக் கண்டித்து, வட்டக்கச்சியில், இன்று காலை 9 மணிக்கு, எதிர்ப்புப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டன.
முன்னதாக வட்டக்கச்சி பிரதேசத்திலிருந்து உழவு இயந்திரங்களில் கிளிநொச்சி காக்கா கடைச் சந்திக்கு பேரணியாக தந்த மக்கள், அங்கிருந்து ஏ9 வீதி ஊடாக மாவட்டச் செயலகத்துக்குச் சென்றனர்.
இதன்போது, மாவட்டச் செயலாளரிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025