Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 13 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
குருநாகல் - மாஹோ பகுதியில் கடத்தப்பட்ட தாயும் பிள்ளையும், வவனியாவில் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.
மாஹோ பகுதியில், 25 வயது தாயும் 9 மாத மகளும், வீதியில் நடத்து சென்றுகொண்டிருந்த போது, ஓட்டோ சாரதியொருவர், தான் ஓட்டோவில் அழைத்துச்சென்று வீ்ட்டில் விடுவதாகக் கூறி, அவர்களை அதில் ஏறச் சொல்லியுள்ளார்.
இதனை நம்பி குறித்த தாயும் பிள்ளையும் ஓட்டோவில் ஏறியுள்ளனர். இவர்களை, மீண்டும் வான் ஒன்றில் பலவந்தமாக ஏற்றியுள்ள குழுவொன்று, வவுனியாவுக்குக் கடத்திச் சென்றுள்ளது.
இதன்போது குழந்தை தொடர்ச்சியாக அழுதமையால், பூந்தோட்டம் பகுதியில் தாயையும் பிள்ளையையும் இறக்கிவிட்டு, வான் சென்றுள்ளது.
இதனையடுத்து, தாயையும் பிள்ளையையும் மீட்டுள்ள அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு நடந்த விவரத்தைக் கூறியதை அடுத்து, வவுனியா பொலிஸார், தாயையும் பிள்ளையையும் வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று, விசாரணை நடத்திய போதே, சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
வவுனியா பொலிஸாரால் குருநாகல் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, குருநாகல் பொலிஸார் வவுனியாவுக்கு வருகைதந்து, தாயையும் பிள்ளையையும் குருநாகலுக்கு அழைத்துசென்றதுடன், மேலதிக விசாரணைகளை, குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
21 minute ago
45 minute ago