2021 மே 07, வெள்ளிக்கிழமை

குருந்தூரில் நாளை அகழ்வாராய்ச்சி பணி ஆரம்பம்

Niroshini   / 2021 ஜனவரி 27 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம்  சண்முகம்

 

குருந்தூர் மலை பகுதிக்கு இன்றைய தினம் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுகின்ற அதிகாரிகள் வருகைதந்துள்ளதோடு,  பணிக்கு  தேவையான உபகரணங்கள் பலவும் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாளைய தினம் முதல் தொடர்ச்சியாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகளை செய்ய போவதாக, குறித்த தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சிக்கு பொறுப்பாக வருகை தந்திருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

இருப்பினும், இன்றைய தினம் அவர்கள் கொண்டுவந்த அகழ்வாராய்ச்சிகான பொருள்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தூண்கள் போடுவதற்கு பயன்படுத்துகின்ற தூண் பெட்டிகளும்  அங்கே கொண்டு வரப்பட்டிருக்கிறமை குறி;ப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X