Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜனவரி 06 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தற்போது உள்ள நிர்வாகத்தில் குற்றச்சாட்டுகள் எதுவும் இருந்து நிரூபிக்கப்பட்டால், பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு செல்ல தாங்கள் தயாராக இருப்பதாக, கிளிநொச்சி பனை - தென்னை வள கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மதனரூபன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி பனை -தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்துக்கு இடைக்கால நிர்வாகம் ஒன்றை பொறுப்பேற்குமாறு, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரால் திடீரென சிலர் அனுப்பப்பட்டனர் எனவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணயாளர்கள், அங்கத்தவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கூறினார்.
கூட்டுறவு சட்டவிதிகளுக்கு அமைவாகவே, வாக்கெடுப்பு மூலம் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது எனத் தரிவித்த அவர், இந்த நிர்வாகம், பணியாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் நலன்களில் அக்கறை கொண்டு செயற்படுகின்றது எனவும் கூறினார்.
அரசியல் தலையீடுகள் எதனையும் இந்தப் பணியாளர்கள் விரும்பவில்லையெனத் தெரிவித்த அவர், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காகவே, இந்த இடைக்கால நிர்வாகத்தை பொறுப்பேற்றுமாறு அனுப்பியிருக்கின்றார் எனவும் கூறினார்.
அதற்கு, ஒருபோதும் தாங்கள் இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்த அவர், தங்களுடைய நிர்வாகத்தில் ஏதேனும் முறைகேடுகள் இருப்பின், அவற்றை ஆதாரங்களுடன் நிரூபித்தால், அந்த நேரமே சகலவற்றையும் ஒப்படைத்துவிட்டு, வெளியேற தயாராக இருப்பதாகவும் கூறினார்.
அத்துடன், சட்ட ஏற்பாடுகளில் எங்கும் குறிப்பிடப்படாத வகையில், பராமரிப்பு நிதி என்ற அடிப்படையில், 27 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட நிதி கடந்த காலங்களில் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், மதனரூபன் கூறினார்.
குறித்த செவானது, கூட்டுறவு சட்டவிதிகளுக்கு மாறாக இது செலவிடப்பட்டுள்ளதாகச் சாடிய அவர், இது தொடர்பில் பொறுப்பு கூறவேண்டியவராக ஆணையாளர் உள்ளதுடன், அவர் அனுமதி வழங்கியுள்ளார் எனவும் கூறினார்.
எனவே, இவ்வாறான விடயங்களை மூடி மறைப்பதற்காகவே, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக, மதனரூபன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
01 May 2025
01 May 2025