Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால், அரசாங்கத்தை எதிர்த்து, தமிழ் மக்களுக்கான தீர்வை எவ்வாறு பெற்றுக்கொடுப்பதென வினவிய தமிழீழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்டக் கிளையினர், எனவே, கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் உறுதிப்படுத்துங்களெனவும் கூறினர்.
இது தொடர்பில், டெலோ அமைப்பின் மன்னார் மாவட்டக் கிளை, இன்று (08) விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதம கொரடா மற்றும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் போன்ற பதவிகள் வழங்குவது தொடர்பான கூட்டத்தில், கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான டெலோ மற்றும் புளொட் அமைப்புகளுக்கு பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆனால் பிரதம கொரடா பதவி தொடர்பான இழுபறி நிலையில் முடிவெதுவும் எட்டப்படாமல் கூட்டம் குழம்பியுள்ளது. நாங்கள் பதவிக்காக ஆசைப்பட்டு இந்த விடயத்தை கூறவில்லை. கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சியினருக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதையே இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்” எனவும், அவர்கள் கூறியுள்ளனர்.
ஒரு கட்சிக்குள் உள்ளவர்களை முன்மொழிந்து வழிமொழிவது என்றால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு கட்சியாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர்கள், ஆனால் இன்னும் பதிவு செய்யப்படாமல் ஒரே கட்சி சார்ந்தவர்களை அனைத்து பதவிகளுக்கும் முன் மொழிவதை ஏற்க முடியாதெனவும் கூறியுள்ளனர்.
“எனவே, தமிழ் மக்களின் நன்மை எதிர்கால அரசியல் கருதி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக செயற்பட வேண்டும்” எனவும், அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago